எம்பி, எம்எல்ஏக்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் ஏன் படிப்பதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் ரெட்டைமலை சீனிவாசனின் 77 வது நினைவுநாளையொட்டி சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் தரம் குறைவாக இருக்கிறதா? என கேள்வியெழுப்பினார்.