முதலீட்டு பணத்துக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பணமோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தனியார் நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் ரயில்வே நிலையம் அருகில் உள்ள ஏகே ஸ்டாக் ட்ரேடர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக போச்சம்பள்ளியை சேர்ந்த சுதாகர் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியிலும் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.