சென்னை திருவொற்றியூரில் குடிபோதையில் தலைமை காவலரை தாக்கிய 4 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பலகை தொட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் செந்தில் குமார் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டின் அருகே மது அருந்திய 4 இளைஞர்கள், காலி மதுபாட்டிலை அங்கு நிறுத்தப்பட்டிருந்த செந்தில் குமாரின் கார் மீது வீசினர்.
இதை தட்டிக்கேட்ட செந்தில் குமாரை அவர்கள் கான்கிரீட் கல்லால் அடித்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.