சென்னையிலிருந்து 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தின் மீது திண்டுக்கல் அருகே லாரி மோதியதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோவைக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி சித்தையன்கோட்டை அருகே வந்தபோது ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியதில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுனர் பலியானார். லாரிக்குள் சிக்கிய ஓட்டுனர் சடலத்தை போராடி மீட்டனர்.
பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். விபத்து காரணமாக அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது