திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஜெராக்ஸ் மெஷினுக்குள் பதுக்கி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அந்த ஜெராக்ஸ் கடை உள்பட 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
4 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு 7 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.