திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் கணவர் சரணடைந்தார்.
அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், பச்சையம்மன் தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சுரேஸ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள அத்தை வீட்டுக்கு பச்சையம்மாள் வந்த நிலையில், அங்கு வைத்து மனைவியை கழுத்தை அறுத்து சுரேஷ் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்