சென்னையில் பட்டபகலில் பிரபல ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டில் 10 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை போனது.
ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த பன்சிதர் குப்தா காலையில் பாரிமுனையிலுள்ள தனது ஸ்வீட் கடைக்கு சென்றுவிட்ட நிலையில், தாய் பன்சிதர் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 10 லட்சம் பணம், 10 தங்க நாணயங்கள், 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் நேபாளத்தை சேர்ந்த திபேந்திரா ஆஜி என்பவரை தேடி வருகின்றனர்.