கல்பாக்கத்தில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஓராண்டுக்கு மேலாக தேடப்பட்டு வந்த பாதிரியார் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கல்பாக்கத்தில் பாதிரியார் சார்லஸ் நடத்தி வந்த ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்த சிறுமியை, அவர் பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது.
பின்னர் அந்த சிறுமியை ராஜமங்கலத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு பாதிரியார் தலைமறைவான நிலையில், கடந்தாண்டு அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை தேடி வந்த போலீசார், கோயம்பேட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிட வந்த போது அவரை கைது செய்தனர்.