திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு, இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாட்கள் தொடர்ந்து பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் வந்ததையொட்டி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவன், செய்முறை தேர்வு எழுதாமல் இருக்க, பள்ளிக்கு குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.