கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் தங்களிடம் பேசவில்லை என்று செல்வி கூறி வந்த நிலையில் , சம்பவத்தன்று தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் சென்று மாணவியின் தாய் செல்வி பள்ளி நிர்வாகத்துடன், பேச்சுவார்த்தை நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில், சிசிடிவியில் தாங்கள் பேசியதை வெளியிட பள்ளி நிர்வாகம் தயாரா ? என்று செல்வி சவால் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ள நிலையில் மாணவியின் தாய் செல்வி இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாணவி உயிரிழந்த அன்று பள்ளி நிர்வாகம் தரப்பில் தங்களை அழைத்து பேசவில்லை அடித்து விரட்டினார்கள் என்று குற்றஞ்சாட்டி இருந்தார் .
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் சென்று மாணவியின் தாய் செல்வி பள்ளி நிர்வாகத்துடன், பேச்சுவார்த்தை நடத்திய சிசிடிவி காட்சிகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது
இது குறித்து விளக்கம் அளித்துள்ள செல்வி, முதலில் தாங்கள் எதுவும் பேசவில்லை என்று மறுத்தார். பின்னர் ஸ்ரீமதியுடன் படிக்கின்ற மாணவிகளை சந்திக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றதாக தெரிவித்தார்,
இருதரப்பு பேச்சு வார்த்தையில் இழப்பீடு தொடர்பாக பேசப்பட்டதா ? என்ற கேள்விக்கு சிசிடிவியில் தாங்கள் பேசியதை பள்ளி நிர்வாகம் வெளியிட தயாரா ? என்று சவால் விடுத்தார்
சிசிடிவி காட்சிகளை பார்க்கவே இல்லை என்று தெரிவித்த செல்வி, பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்