தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
கூடலுரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர் லியோ சாம் உடன் கம்பத்திற்கு சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
கூடலூர் துர்க்கை அம்மன் கோவில் அருகே இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் எதிர்பாராதவிதமாக திடீரென நேருக்கு நேர் மோதியதில் 3பேரும் உயிரிழந்தனர்.