சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் பேக்கரி கடை நடத்தி வந்தவர் முருகன், அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் இரு சக்கர வாகனத்தை பேக்கரி கடை முன் நிறுத்திவிட்டு, மணி என்பவர் வந்து கேட்டால் கொடுக்கமாறு இந்த சாவியை கொடுத்து விட்டு சென்றார் .
சம்பவத்தன்று இரவு குடிபோதையில் பேக்கரி கடைக்கு வந்த மணி , இரு சக்கர வாகன சாவியை தருமாறு கேட்டதாகவும், உன்னை யார் என்று எனக்கு தெரியாது என்று முருகன் சாவி கொடுக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மணி தனது கூட்டளி அருட்செல்வத்தை அழைத்து வந்து பேக்கரி கடையை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து சூறையாடினார்.தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்...