மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 16ம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மின்கட்டணம், பேருந்து கட்டணம், பால்விலையை உயர்த்த மாட்டோம் என தெரிவித்து ஆட்சியில் அமர்ந்தவர்கள், ஏற்கெனவே மிகப்பெரிய துன்பத்தில் இருக்கும் தமிழக மக்களுக்கு கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்தும் விதமாக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.