சிவகங்கை அருகே பெண்தலைமை ஆசிரியை கொலை வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புத்தூரில் வசித்து வந்த தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை, கொலை செய்து 10 பவுன் நகை உட்பட 2லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த வழக்கில் 2 தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், ரஞ்சிதத்தின் வீட்டருகே வசித்து வரும் அவரது தம்பி மனைவி நதியாவிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.
கணவன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதால், சூர்யா என்ற ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இதனை தனது கணவனிடம் ரஞ்சிதம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நதியா ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.