ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறில் தொடர்பில்லாத ஒரு நபரை தவறுதலாக, சார்பு ஆய்வாளர் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கொசவபட்டி பெட்ரோல் பங்கில், அளவை விட பெட்ரோல் குறைவாக போடப்படுவதாக கூறி சில இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த அம்பிளிக்கை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சவடமுத்து, தகராறில் ஈடுபட்டவர்களோடு சேர்த்து அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப்பதி என்பவரையும் காரில் ஏறும் படி கூறியுள்ளார்.
இதில் தனக்கு சம்பந்தமில்லை என அவர் கூறியும், சார்பு ஆய்வாளர் அவரை ஆபாசமாக திட்டி, லத்தியால் தாக்கி காரில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் விசாரித்ததில், அந்த நபருக்கு தகராறில் சம்பந்தமில்லை என தெரியவந்ததை அடுத்து, அந்த நபர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..