இயேசு தான் உண்மையான கடவுள், மற்ற சக்திகளை போல இல்லை, என்று ராகுல் காந்தியிடம் , ஜெயிலுக்கு சென்று வந்த பாதிரியார் கலந்துரையாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் ஒரு பகுதியாக பாதிரியார்கள் உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாற்று மத கடவுளரை துவேசம் செய்து சிறைக்கு சென்று வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் பாதிரியார்கள் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினர்.
அப்போது பேசிய ஜார்ஜ் பொன்னையா, இயேசு கிறிஸ்துவர்களின் கடவுள் என கூறினார், இதையடுத்து ஜார்ஜ் பொன்னையாவிடம் ராகுல்காந்தி, இயேசு கடவுளின் ஒரு வடிவம் தானே? என கேட்டார். அதற்கு பதிலளித்த ஜார்ஜ் பொன்னைய்யா, “இல்லை இயேசு தான் உண்மையான கடவுள், அவர் மற்ற சக்திகள் போல இல்லாமல் தன்னை மனித உருவத்தில் வெளிக்காட்டியதே இயேசு” என விளக்கமளித்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என நடைபெறும் இந்த பயணத்தில், இவ்வாறு இயேசு தான் உண்மையான கடவுள் எனவும் மற்ற சக்திகள் போல் இல்லை எனவும் ஜார்ஜ் பொன்னையா, ராகுல் காந்தியிடம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாதிரியார் ஸ்டோன்ஸ் சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில், மத துவேசத்தை தூண்டும் விதமாக பேசியதற்காக ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.