கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கல்குவாரி உரிமம் குறித்து கேள்வி எழுப்பியதால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன், நேற்று மாலை காருடையாம்பாளையம் - குப்பம் சாலையில் சென்ற போது, கல்குவாரிக்கு சொந்தமான மினி லாரி மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
குவாரி உரிமம் தொடர்பாக ஜெகநாதன் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் அவருக்கும், குவாரி உரிமையாளருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அதனால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கல் குவாரி உரிமையாளரை கைது செய்தனர்.