சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் பெண்களுக்கு உதவி செய்வது போல நடித்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை எடுத்து மோசடி செய்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
எம்கேபி நகரை சேர்ந்த ஜாக்குலீன் என்ற பெண் ஐடி ஊழியர், ஏடிஎம் அட்டையை ஆக்டிவேட் செய்து, முதல் மாத சம்பளத்தை எடுக்க சென்றார். அங்கிருந்த நபர், அவரின் அட்டையை வாங்கி ஆக்டிவேட் செய்து, பிறகு தன்னிடம் இருந்த இன்னொரு அட்டையை கொடுத்து நைசாக நழுவியுள்ளார்.பின்னர் திரும்பி வந்து 29 ஆயிரத்தை எடுத்துள்ளார்.
புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து, ஆவடியில் உள்ள பீரங்கி தயாரிப்பு ஆலையில் டெக்னீசியனாக பணியாற்றும் பெரம்பூரை சேர்ந்த பிரபுவை கைது செய்து, 271 அட்டைகளை மீட்டனர். விசாரணையில் மகளின் திருமணத்துக்கு வாங்கிய 15 லட்சம் ரூபாய் கடனை அடைக்க இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக பிரபு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.