செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முண்டாசுக் கவிஞன் பாரதியின் 101-வதுஆண்டு நினைவுதினம் இன்று மகாகவி நாளாக கடைபிடிப்பு.!

Sep 11, 2022 07:39:42 AM

முண்டாசுக் கவிஞன் பாரதியின் 101-வதுஆண்டு நினைவுதினம் இன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்
அவனே கவி என்றார் பாரதி...

 

சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் அந்த முண்டாசுக்கவி.

 

தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு.

 

பாரதி ஒரு ஆன்மீகக் கவியாக பலருக்குத் தெரியலாம். கண்ணன் பாடல்கள் அதற்கு ஒரு காரணம். கண்ணனை குழந்தையாக, தாயாக, சேவகனாக, நண்பனாக, வழிகாட்டியாக நினைத்து பாடல்கள் புனைந்தவர் பாரதியார்

பாரதி ஒரு தீர்க்கதரிசி... அதனால்தான் சுதந்திரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தி முழங்கினார்..

 

தமிழ் இலக்கியத்திற்கு புதுக்கவிதை, ஹைகூ, சிறுகதை என நவீன வடிவம் கொடுத்தவரும் பாரதிதான்....சங்க கால புலவர்கள் பிடியில் இருந்த புரியாத தமிழை, மக்களுக்கான எளிய தமிழாக மாற்றிய சுடர் மிகும் அறிஞராக பாரதி திகழ்ந்தார்..

 

பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மீனவர் பிரச்சினை, இலங்கை மலையகத் தமிழர் துன்பங்கள், இதழியல், கேலிச்சித்திரம் என தமது காலத்திற்கு முன்னே சென்று சிந்தித்த பாரதி இன்றும் தமிழக மக்களுக்கு ஒரு அழியா சொத்துதான்.

இளம் வயதிலேயே காலமான போதும் காலா வா உன்னைக் காலால் மிதிக்கிறேன் என்ற பாரதியின் கவிதை வரிகள் மரணத்தை வென்று இன்றும் உயிர்த்திருக்கிறது.


Advertisement
மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மக்கள் கோரிக்கை
ஈரோடு பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.13 லட்சம் பணம் மோசடி
கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணியிடத்தில் விபத்து
ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்
சென்னை, இராயபுரம் மேம்பாலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்கள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்
தஞ்சாவூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் 7 சவரன் மதிப்பிலான செயின் பறிப்பு
பெற்றோரின் எதிர்ப்பால் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதலர்கள்
புயல் சின்னத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை

Advertisement
Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்

Posted Nov 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..

Posted Nov 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!

Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை


Advertisement