கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா ? என கண்டறியும் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த போலி மருத்துவர் கள்ளக்குறிச்சி அருகே கைது செய்யப்பட்டார்.
மலைக்கோட்டாலம் கிராமத்தில் வடிவேலு என்பவரது வீட்டில் மாவட்ட அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அங்கு சட்டவிரோதமாக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள வடிவேலு, தன்னை மருத்துவர் என கூறி நடத்தி வந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த அதிகாரிகள், 2 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்ததோடு போலி மருத்துவர் வடிவேலுவை போலீசில் ஒப்படைத்தனர்.