ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அடிபம்புடன் சேர்த்து கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது.
அங்குள்ள 18 வது வார்டில் உள்ள தாசில்தார் குறுக்கு தெருவில் அடிபம்பை இடமாற்றாமல் அதனுடன் சேர்த்து நகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை போட்டதால், தண்ணீர் பிடிக்க முடியாத நிலை நேரிட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.