இந்தியா வளர்ச்சியை நோக்கி சரியான பாதையில் செல்வதாகவும், 2028 ஆம் ஆண்டில் சீனாவை விட, இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் இருப்பார்கள் என ஐ.நா.வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், தொழில் நிறுவனங்களின் தேவையை அறிந்து மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே அனைவரின் உழைப்பும், பணியும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.