கடலூரில் போக்குவரத்து எச்சரிக்கை சிக்னல் கம்பம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்ததில், காரில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூரில் தெரு முனைகள் மற்றும் நான்கு முனை சந்திப்புகளில் வாகனங்களை எச்சரிப்பதற்காக, போக்குவரத்து எச்சரிக்கை சிக்னல்கள் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கம்மியம்பேட்டை - அண்ணா பாலம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிக்னல் கம்பம் திடீரென வீதியில் சாய்ந்து விழுந்தது.
அந்த கம்பம் சற்று தள்ளி விழுந்ததால், அப்போது காரில் வந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.