தமிழ்நாட்டில், மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அண்மையில் இக்கட்டணத்தை மாற்றியமைத்து, கட்டணத்தை அரசு அதிகரித்தது.
இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்களை கேட்டபிறகு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
வீடுகளுக்கு தற்போது 2 மாதங்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர், மாதத்துக்கு 27 ரூபாய் 50 காசுகள் என்ற வீதம் 2 மாதங்களுக்கு கணக்கிட்டு 55 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
அதேநேரத்தில் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.