சென்னை அரும்பாக்கத்தில் வெளிநாட்டிலிருந்து 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்து தராமல் ஏமாற்றிய குருவியை தாக்கிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் கடந்த 7 ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் குக்கரில் வைத்து மறைத்து 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.
ஆனால் இந்த தங்கத்தை தாமே வைத்துக் கொள்ள எண்ணிய ஆனந்தராஜ், தெரிந்த நண்பர் வீட்டில் வைத்து பிரித்து பார்த்த போது தங்கம் இல்லை என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று காலை ஆர்கே பேட்டையில் உள்ள ஆனந்தராஜ் வீட்டிற்கு சென்ற கும்பல் ஒன்று அவரை அங்கிருந்து காரில் கடத்தி அரும்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் அடைத்து வைத்து தாக்கியுள்ளது. தகவலின் பேரில் போலீசார் வந்து ஆனந்தராஜை தாக்கிய 5 பேரை கைது செய்தனர்.