ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் வீட்டிற்கு 94 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என குறுஞ்செய்தி வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேவண்ணா, மலைகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மின் இணைப்பு பெற்ற நிலையில், மாதந்தோறும் 100 யூனிட் வரை மட்டுமே பயன்படுத்துவதால் இதுவரை மின் கட்டணம் செலுத்தியதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது செல்போனுக்கு மின் கட்டணம் ரூ.94,985 செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து ரேவண்ணா, தாளவாடி மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் முறையிட்ட போது மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் தவறாக குறுஞ்செய்தி வந்துள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.