வெளிநாட்டில் இருந்து பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயம் செய்ய இயலாத வறண்ட பகுதியில் தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் சுமார் 400 கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டப்படுவதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழக்க நேடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.