ஓணம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மலையாள மக்கள் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டு திருவிழாவான ஓணம் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.