ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளதால், திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக, மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 45 மின் கம்பங்கள் தயாராக உள்ளன என்றும், தாழ்வாக செல்லும் மின்வட கம்பிகள், வலுவற்ற மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் சார்பில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.