அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சார்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.