நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டியதாக புகாரில் கைது செய்யப்பட்ட பட தயாரிப்பாளருக்கு விழுப்புரம் வானூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தங்கி அமலாபால் மற்றும் அவருடைய ஆண் நண்பர் பவிந்தர் சிங் ஆகியோர் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, தனது பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பவிந்தர் சிங் உள்ளிட்டோர் மீது அமலாபால் புகாரளித்தார்.
அதனடிப்படையில், பவிந்தர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது.