சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 58 மில்லி மீட்டர் மழை பொழிந்ததால் ஏற்காட்டில் 60 அடி பாலம் அருகே நள்ளிரவில் ராட்சத பாறைகள் சரிந்து சாலையில் விழுந்த நிலையில், அங்கு திடீர் நீர் வீழ்ச்சியும் உருவாகியுள்ளது.
இதனால் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் பொக்லைன் வாகனங்கள் மூலம் மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு வருகிறது.
மேலும், ராட்சத பாதைகளை வெடி வைத்தும் தகர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டு கண்காணித்தார்.