செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீதிமன்ற வளாகத்தில் கைதியை கொல்ல முயற்சி.. ஆயுதங்களுடன் வந்த 3 பேரை மடக்கிப் பிடித்த பெண் போலீசார்!

Sep 06, 2022 12:56:39 PM

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில், வழக்கில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட ரவுடியைக் கொல்ல முயன்ற கும்பலில், 3 பேரை பணியில் இருந்த பெண் காவலர்கள் மடக்கி பிடித்தனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாலா என்பவன் மீது கொலை, ஆட்கடத்தல் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை ரவுடிகளுடன் கூட்டுச் சேர்ந்து இவன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கூலிப்படை தலைவனான பாலா, இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்வது அவன் பாணியாகும். தென் சென்னை பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த மயிலாப்பூர் சிவக்குமாரை கடந்த ஆண்டு கூலிப்படையை ஏவி மதுரை பாலா கொலை செய்துள்ளான்.

இந்த வழக்கு விசாரணைக்காக, வேலூர் சிறையில் இருந்து பாலாவை போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது திடீரென ஒரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களுடன் அவன் மீது பாய்ந்தது.

இதனைக் கண்டு உஷாரான காவலர்கள் மதுரை பாலாவை சுற்றி நின்று கொலை கும்பலை பிடிக்க முயன்றனர். தாங்கள் போட்ட ஸ்கெட்ச் தவறியதால் 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. அப்போது நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பில் இருந்த பெண் காவலர்களான ராஜலட்சுமி, கிருஷ்ணவேனி, சசிகலா ஆகியோர் அவர்களை மடக்க முயன்றனர்.

போலீஸ் பிடித்தால் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு தப்பிவிடலாம் என்ற திட்டத்துடன் வந்த கொலை கும்பலில் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னால் ஓடி வந்த மூவரில் முதலில் கத்தியுடன் பாய்ந்த ஒருவனை எதிர் கொண்ட ஆயுதப்படை பெண் காவலர் தனது எஸ்.எல்.ஆர் ரக நீண்ட துப்பாக்கியை திருப்பி வைத்து துப்பாக்கியின் அடி பாகத்தால் தலையில் ஓங்கி அடித்ததும் அந்த நபர் மண்டை உடைந்து ரத்தம் கொப்பளிக்க சரிந்து விழுந்தான்.

பின்னால் ஓடி வந்த இருவர் பீதியடைந்த நிலையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற பெண் காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்தியுடன் ஒரு பெப்பர் ஸ்பிரேவும் கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட மூன்று பேரும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெட்ட வந்த நபர்கள் செனாய் நகரை சேர்ந்த சக்திவேல், அருண் மற்றும் குன்றத்தூரை சேர்ந்த அப்துல் என்பது தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் ரவுடிகளான அப்பாஸ் மற்றும் ரோகித் ஆகியோரிடையே மாமூல் வசூலிப்பதில் தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவுடி ரோகித்துக்கு ஆதரவாக மதுரை பாலா செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் ரோகித்தின் கை ஓங்கியுள்ளது.

இதனால் அப்பாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து சதித் திட்டம் தீட்டி மதுரை பாலா நீதிமன்ற வளாகத்தில் வரும்போது கொல்லமுயன்றது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அப்பாஸ் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கக்தியுடன் பாய்ந்த கொலையாளிகளை சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டு பிடித்த மூன்று பெண் காவலர்களையும் அதிகாரிகள் பாராட்டினர்.

இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் இரண்டு நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக வரும் நபர்களின் பெயர், விவரங்கள் மற்றும் உடமைகள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 


Advertisement
ஓராண்டாகியும் கிடைக்காத பயிர் காப்பீட்டுத் மற்றும் இழப்பீடு தொகை - விவசாயிகள் போராட்டம்
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் ஆரம்பம்..
மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
கோவிலில் கைவரிசை காட்டியவருக்கு போலீசார் வலைவீச்சு..!
விஐடி பல்கலைகழகத்தில் 40 வது ஆண்டு விழாவில் ருசிகரம்..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..
பாம்பன் சாலை பாலத்தில் போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்..!
தஞ்சையில் அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம்..!
இ.பி.எஸ் பண்பாடு இல்லாமல் பேசுகிறார் : முதலமைச்சர்
பெண்ணை அடித்துக் கொன்று மூட்டையில் கட்டி வீசிய நபர் - போலீசார் விசாரணை

Advertisement
Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!


Advertisement