அரசு பேருந்துகளில் தொலைதூர நகரத்திற்கு சென்று, வர ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டண சலுகை அமலுக்கு வந்துள்ளது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட நகரத்திலிருந்து புறப்பட்டு, மீண்டும் அதே இடத்திற்கு திரும்ப up and down சேர்த்து ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சலுகை கட்டணத்தில் பயணிப்போருக்கும், பண்டிகை கால சிறப்பு பேருந்துகளுக்கும் இந்த 10 சதவீத கட்டணக் குறைவு சலுகை பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.