தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன.
சென்னை, புது வண்ணாரப்பேட்டை, ஆர் கே நகர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், புளியந்தோப்பு, வியாசர்பாடி , பூக்கடை, மாதவரம் பால்பண்ணை, கீழ்பாக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 160 வினாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 89 விநாயகர் சிலைகள் கொட்டும் மழையிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நடுமலை ஆற்றில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மினி ஆட்டோவில் ஊர்வலமாக எடுத்து சென்று கிரேன் மூலம் சுவேத நதியில் கரைக்கப்பட்டன.
விருதுநகர் , சிவகங்கை, குமரி, தோவாளை, ஆரணி, ஆலங்குடி, அம்பாசமுத்திரம், பரமத்திவேலூர் ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
புதுச்சேரியில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நள்ளிரவு வரை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.