ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆற்றில் குளித்த மூன்று இளம்பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஜவ்லக் என்பவரின் 13 வயதான மகள் பவுசியா மற்றும் அவரது உறவினரின் 2 மகள்கள் ஆகியோர் தக்கோலம் கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர்.
உடனடியாக மூன்று பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தக்கோலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.