இந்திய சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இரும்புக் குழாயால் தாக்கியதில், 15 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகிலிருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றனர்.
அதை தட்டி கேட்ட 15 மீனவர்களை மீன் அள்ளப் பயன்படுத்தும் சவுள், இரும்பு ராடு, ரப்பர் குழாய் கொண்டு கண் மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.