திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தனது வார்டில் 10 தினங்களாக குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்ட படுவதாகவும், குடி நீர் பிரச்சனையை தீர்க்காவிட்டால் மக்கள் நகராட்சிக்குள் புகுந்து அடித்து நொறுக்குவார்கள் என்று திமுக கவுன்சிலர் வாட்ஸப்ப்பில் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நகராட்சி பகுதியில் கடும் குடுநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நகராட்சி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் என்பவர் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆடியோ ஒன்று திருச்செந்தூர் முழுவதும் வைரலாகிவருகிறது.
இது நிர்வாக சீர்கேடா, இல்ல கடவுளோட சோதனையா, இல்ல திமுக கவுன்சிலர்களாகிய நாங்க வந்த தரித்திரமா, அனைத்து பொதுமக்களும் நீங்க எல்லாம் ஜெயிச்சி வந்துட்டிங்க குடிதண்ணீர் கிடைக்கவில்லை என திட்ட ஆரம்ப்பிச்சிட்டாங்க என்று தொடங்கி ஒரு நாள் கோபத்தில் மக்கள் நகராட்சிக்குள் புகுந்து நாம் அனைவரையும் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும் குறிப்பிட்ட கவுன்சிலர் ரூபனின் குரல்பதிவு வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகின்றது.
வார்டு மக்களின் ஆதங்கத்தை குரல்பதிவில் தெரிவித்ததாக 3-வது வார்டு கவுன்சிலர் ரூபன் தெரிவித்தார். அசுரரை வென்ற இடத்தில் தட்டுபாடில்லா குடி தண்ணீர் வழங்க அரசு நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு