ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், தர்மம், நீதி வென்றுள்ளது என்றும், தீர்ப்பினை மிகுந்த மனமகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, அ.தி.மு.க.வால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறியுள்ளார்.
அவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, நீதி, நேர்மையை நம்பி தொண்டர்களின் ஆதரவுடன் போராடி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.