விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நீரின் திசையை மாற்ற எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் ஒரு பகுதி வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1950ம் ஆண்டு கட்டப்பட்ட 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லீஸ் அணைக்கட்டின் வலதுபுறத்தில் உள்ள 4 மதகுகள் கடந்த ஆண்டு வெள்ளத்தில் உடைந்தது.
தற்போது பெய்து வரும் கனமழையாலும் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், வெள்ள நீர் சம நிலையில் செல்லாமல் ஒரு பகுதியாக செல்கிறது. இதனால் தடுப்பணையில் நடுப்பகுதியில் உள்ள சிமெண்ட் தூண் டெட்டனேட்டர் குச்சி, வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டது.