மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 308 பணியிடங்கள் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது, குறிப்பாக இளம்பெண்கள் தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தும் சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.