தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளதால், ஆட்சியை விமர்சிக்க முடியாத இக்கட்டான சூழலில் காங்கிரஸ் உள்ளதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துகொண்டிருந்தபோது அண்ணாமலையை வரவேற்க அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்பினர். அவர்கள் ஏதோ புரியாத மொழியில் பேசுவதாக கார்த்திக் சிதம்பரம் கிண்டலடித்தார்.