செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.. கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை.!

Aug 31, 2022 09:04:43 PM

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் வேல் விநாயகர், கலச விநாயகர், பூந்தி விநாயகர் என வித்தியாசமாக செய்யப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள் பக்தர்களை கவர்ந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் விழாக்கோலம் பூண்டது. கோவிலுக்கு எதிரே உள்ள பொற்றாமரை குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 விநாயகர் சதுர்த்தி சிறப்பு படையலாக, திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு தலா 75 கிலோ எடை கொண்ட 2 மெகா கொழுக்கட்டைகள் படையிலப்பட்டன. மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு ஒரு கொழுக்கட்டை படைக்கப்பட, மலை உச்சியில் உள்ள பிள்ளையாருக்கு ஒரு கொழுகட்டை தூளி கட்டி தூக்கிச் சென்று விநாயகருக்கு படையலிடப்பட்டது. .

 கோவை மாவட்டம் புலியகுளத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சுமார் 4 டன் மலர்களால் 19 அடி உயர விநாயகர் சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. கோவிலில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 திண்டுக்கல்லில் ஒரே கல்லால் செய்யப்பட்ட சுமார் 32 அடி உயர ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், 2 ஆயிரம் தென்னங்கன்றுகளுக்கு மத்தியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலயத்தில் உள்ள 108 விநாயகர் சிலைகளும் பல்வறு விதமான செடிகளால் அலங்கரிக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகர் சன்னதி மற்றும் கருவறை முழுவதும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

 சென்னை கொளத்தூர் ரெட் ஹில்ஸ் சாலையில சுமார் 50 ஆயிரம் பஞ்சலோகத்தால் ஆன சிறிய வடிவ வேல்களைக் கொண்டு சுமார் 30 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போல கொளத்தூர் பூம்புகார் நகரில் 3 ஆயிரத்து 600 கலசத்தினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

 சென்னை தியாகராயர் நகரில் சுமார் 100 கிலோ பூந்தி, 25 கிலோ பால்கோவா உள்ளிட்ட உணவு பண்டங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. கடலில் சிலையை கரைக்கும் போது உயிரினங்கள் சாப்பிடுவதற்காக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மணலியில் 35 ஆயிரம் ஸ்கெட்ச் பேனா மற்றும் 800 ஜியோமெட்ரிக் பாக்ஸ்கள் மூலம் செய்யப்பட்ட 18 அடி உயரம் கொண்ட, புத்தகம் படிக்கும் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த சிலை 4 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த கலர் பென்சில்கள், ஜியோமெட்ரிக் பாக்ஸ்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில், விநாயகரும் அவரது வாகனமான மூஷிகரும் இருசக்கர வாகனத்தில் செல்வது போன்று வைக்கப்பட்டுள்ள சிலை பக்தர்களை  கவர்ந்துள்ளது. மூஷிகர் வகிடு எடுத்து தலை வாரி சீருடை அணிந்து, தோல் பையை மாட்டிக் கொண்டு விநாயகருடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை திரு.வி.க. நகர் திருவள்ளுவர் தெருவில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து, ஆயிரத்து 855 அன்னாசி பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 13 அடி உயர விநாயகர் சிலையை வைத்துள்ளனர்.


Advertisement
கடலில் சீற்றத்துடன் மேல் எழும்பிய அலைகளால் கரையில் அரிப்பு
கணவர் மூலமாக லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது
மழை காரணமாக சென்னையில் 6 விமான சேவை ரத்து
சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் புயல்,புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்
மழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..
நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த வழக்கு ..
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை: இ.பி.எஸ்
பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை - விவசாயிகள் கவலை..
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தரைக்க்காற்று பலமாக வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

Advertisement
Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Posted Nov 29, 2024 in Big Stories,

லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!

Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்

Posted Nov 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..


Advertisement