சேலம் மாவட்டம் கெங்கவல்லி நான்கு ரோடு தம்மம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் குமரேசன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இதனிடையே நேற்று இவரது கடைக்கு கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் வந்து கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ஆப்-பாயில் ஒழுங்காக போட வில்லை பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் குமரேசன் கேட்டபோது அவரையும் கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர் . பின்னர் கடையில் இருந்த மாவு , முட்டைகளை கீழே தள்ளி சூறையாடியுள்ளனர் .
இச்சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் குமரேசன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஓட்டலில் இருந்த சிசிடிவி, கேமராவை ஆய்வு செய்து குடிபோதையில் ஓட்டலை சூறையாடிய அதிமுக, பிரமுகர்களான பிரவீன் , பிரபு , கெளதம் , நடராஜ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.