ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையையும் பேரவையில் முன்வைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விசாரணை அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றை தடை செய்ய அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.