கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீமதியின் தந்தை தொடர்ந்த வழக்கில், மன அழுத்தத்திற்குள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டது, கலவரம் பற்றிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை, வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டோர் குறித்து அரசு சார்பில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
இதனிடையே, ஸ்ரீமதி மரண வழக்கில் ஜாமீன் பெற்ற 5 பேருக்கு, இன்று நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டன. ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா சேலத்திலும், பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.
நன்கு படிக்க வேண்டும் என கூறியதற்காக, ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் தற்கொலை குறிப்பில் ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.