பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளையும், மென்பொருளையும் பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட ரஷீத் என்பவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அதன் முந்தைய விசாரணையில், தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்றைய விசாரணையில் அதற்கு பதிலளித்த சி.பி.ஐ.,கண் விழித்திரை பதிவு, விண்ணப்பிக்கும்போது கைரேகை பதிவு, தேர்வு மையத்தில் கைரேகை பதிவு செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தது.