தமிழ்நாடு மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது.
வரும் 2ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.