கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட புதிய கான்கிரீட் வடிகால் வாய்க்கால் 3 நாளில் இடிந்து விழுந்தது.
பெரும்பாக்கம் கிராம சாலையோரத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இந்த கான்கீரீட் வடிகால் வாய்க்கால் போடப்பட்டது. குறைந்த அளவில் சிமென்ட் மற்றும் அதிக அளவில் மணல் கலந்து தரமற்ற முறையில் இந்த வாய்க்கால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்த போது கான்கிரீட் ஓரமாக இருந்த மண் அரித்து செல்லப்பட்டதால் அந்த வடிகால் வாய்க்கால் இடிந்து விழுந்தது.