புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.
மாங்கோட்டை கிராமத்தில் கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் அவருடைய மாடு ஒன்று தவறி விழுந்துள்ளது.
தகவலறிந்து வந்தஆலங்குடி தீயணைப்பு வீரர்கள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாட்டை கயிறுகட்டி பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.